கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாக சோதனை நடத்திய நிலையில் தற்போது சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள அதிமுக பிரமுகர் வெற்றிவேல் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
இவர் அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதியிடம் உதவியாளராக இருந்தவர் என்றும், எஸ்பி வேலுமணி விவகாரத்தில் தொடர்புடையவர் என்றும் கூறப்படுகிறது. இந்த ஐடி ரெய்டால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.