அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக இன்று நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு ஆன பிறகு ஜெயலலிதா நினைவிடம் வந்த எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து அதிமுகவின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்திலிருந்து ஓபிஎஸ் படங்கள் நீக்கப்பட்டுள்ளன. புதிதாக வைக்கப்பட்டுள்ள டிபியில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் இபிஎஸ் இடம் பெற்றுள்ளனர். அதுமட்டுமின்றி ஓபிஎஸ் டுவிட்டர் கணக்கு unfollow செய்யப்பட்டுள்ளது.