Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: அதிர்ச்சியில் முதல்வர் ஈபிஎஸ்…. பெரும் பரபரப்பு….!!!

பூந்தமல்லி மற்றும் விருதாச்சலம் தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி அதிமுக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. மேலும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விருப்ப மனு தாக்கல் செய்து வருகிறார்கள். இதனையடுத்து ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதிலும் சில காட்சிகளில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. தங்களுக்கு உரிய தொகுதி ஒதுக்காததால் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்று வேறு கட்சியுடன் கூட்டணி அமைத்து வருகின்றன.

அதன்படி அதிமுக கட்சியில் இருந்து பலரும் விலகிச் சென்று திமுக போன்ற பல கட்சிகளின் கூட்டணி வைத்துள்ளனர். அதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தேர்தல் நடத்துவதற்கான விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதனால் மாநிலம் முழுவதிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. அதில் பல முக்கிய எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு தரப்படவில்லை. மேலும் பூந்தமல்லி மற்றும் விருதாச்சலம் தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளதால் அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பல்லடம் அதிமுக வேட்பாளர் எம்எஸ்ம் ஆனந்த், ஆலங்குடி அதிமுக வேட்பாளர் தர்ம தங்கவேல், செய்யூர் மற்றும் செங்கல்பட்டு அதிமுக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |