காஷ்மீரில் இந்தோ தீபத்தியன் எல்லை காவல் படை வீரர்கள் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தெற்கு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம் சந்தன்வாரியிலிருந்து பஹல்காம் நோக்கி 39 பேருடன் ஒரு சிவில் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பஹல்காம் என்ற இடத்தில் இந்த பேருந்து விபத்து என்பது நிகழ்ந்திருக்கிறது. 37 இந்தோ திபத்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களும், 2 ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறையை சேர்ந்த இரண்டு வீரர்களும் பயணம் செய்த அந்த பேருந்து என்பது சாலையில் சென்று கொண்டிருந்த போது, பிரேக் பிடிக்காமல் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனை அடித்து அருகில் சென்று கொண்டிருந்த ஆற்றில் கவிழ்ந்து அந்த பேருந்து விபத்துக்குள்ளானது.
அந்த பேருந்து மொத்தமும் அப்பளம் போல நொறுங்கி உள்ளது. அதில் பயணம் செய்த 6 வீரர்கள் பலியாகினர். மேலும் வீரர்களை துரிதமாக மீட்கும்பணி நடைபெற்று வருகிறது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர், அவர்கள் சிகிச்சைக்காக ஸ்ரீநகரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்படுகிறார்கள்.
பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.. ஆனால் அப்படியான ஒரு செய்தி வந்துவிடக் கூடாது என்பதுதான் அனைவரையும் எதிர்பார்க்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது.
Pahalgam, J&K | Six ITBP personnel have lost their lives, while several other personnel received injuries, who are being airlifted to Army hospital, Srinagar for treatment: Police
A bus carrying 37 ITBP personnel and two J&K Police personnel fell into riverbed in Pahalgam today pic.twitter.com/lVhNooPzlT
— ANI (@ANI) August 16, 2022
#WATCH Bus carrying 37 ITBP personnel and two J&K Police personnel falls into riverbed in Pahalgam after its brakes reportedly failed, casualties feared#JammuAndKashmir pic.twitter.com/r66lQztfKu
— ANI (@ANI) August 16, 2022