தனித்தேர்வர்களுக்கான 8ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நவம்பர் 10, 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதீத கன மழை பெய்யலாம் என்பதால் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. புதிய தேர்வுக்கான அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்குநர் சேதுராமவர்மா அறிவித்துள்ளார்..