Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: அனைத்து பள்ளிகளுக்கும் அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில்  அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்தப்படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்ட நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது.

இந்நிலையில் தனியார் பள்ளிகளில் RTE  சட்டத்தின்கீழ் நடப்பு கல்வியாண்டில் சேர்க்கைக்கு கோருவோர் விண்ணப்பிக்கலாம் என்றும் மெட்ரிக் பள்ளி இயக்குநரகம் அறிவித்துள்ளது. RTE சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர் ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 13 வரை https://rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தனியார் பள்ளிகள் LKG மற்றும் 1ம் வகுப்பு சேர்க்கை தொடர்பாக உரிய அறிவிப்பை வெளியிட வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.

Categories

Tech |