2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 முதல் 30ம் தேதி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் விவரங்களை அளிக்கும்படி பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதியிலிருந்து தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது. இதில் பல ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டனர். பின்னர் நீதிமன்றம் தலையிட்டு ஆசிரியர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் பல ஆசிரியர்கள் தமிழக அரசு தங்களது 9 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த போராட்டம் 30-ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்நிலையில் தற்போது 2019 ஜனவரி 22 முதல் 30 ஆம் தேதி வரை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பணியாளர் அளிக்கும்படி அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆசிரியர்கள், பணியாளர்கள் மீதான துறை ரீதியான நடவடிக்கையை வாபஸ் பெற ஏதுவாக விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது.