தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நள்ளிரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு நலனை கருதி கூடலூர், பந்தலூர், உதகை மற்றும் குந்தா ஆகிய நான்கு தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Categories