Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: அனைத்து மாவட்டங்களிலும் நாளை முதல் – அமைச்சர் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் கொரோனாவை  ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இவ்வாறு தடுப்பூசி செலுத்த மக்களிடையே ஆர்வம் இருந்தாலும் தடுப்பூசி கையிருப்பு குறைவாக இருந்ததன் காரணமாக பல இடங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நாளை முதல் தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் மதுரையில் எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டு இதுவரை சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் மட்டுமே நடைபெற்றுள்ளன அடிக்கல் நாட்டப்பட்டு 45 நாட்களில் முடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |