இந்தியாவில் ஜனவரி 16ஆம் தேதி தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. அப்போது முதல் கட்டமாக சுகாதாரத்துறை மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு மார்ச் 1 முதல் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனையடுத்து நாளுக்கு நாள் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து கொண்டே வருவதால் 18 வயதுக்கு மேற்பட்டோரும் வருகின்ற மே 1ஆம் தேதி முதல் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஏழைகள்,நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை 12 கோடிக்கு மேற்பட்ட ஒரு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா அதிகம் உள்ள மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. நேற்று தடுப்பூசி விலை இரு மடங்கு அதிகரித்த நிலையில், இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.