அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் தனித்தனியாக பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களை கூட்டக் கூடாது. இருவரும் ஒன்றாகத்தான் கூட்டவேண்டும். பொதுக்குழுவை கூட்டுவதற்கு 30 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஎஸ்,கூட்டு தலைமையில் தான் அதிமுக செயல்படும் என்று கூறிய ஓபிஎஸ், இபிஎஸ் பற்றி குறிப்பிடும்போது அன்பு சகோதரர் எடப்பாடி பழனிச்சாமி என்றார். நேற்றைய உயர்நீதிமன்ற தீர்ப்பு ஓபிஎஸ் க்கு சாதகமாக வந்த நிலையில் அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதை திட்டவட்டமாக கூறியுள்ளார் ஓபிஎஸ் .இரட்டை தலைமை என்பதில் பிரச்சனை இல்லை என்ற அவர், இருவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம் எனவும் கூறியுள்ளார்.