தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமமுக மற்றும் தேமுதிக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் கட்சியை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. மேலும் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இதற்கு மத்தியில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த குழப்பம் நிலவி வருகிறது. அதன்படி அதிமுக கூட்டணியில் தங்களுக்கு உரிய தொகுதி ஒதுக்காததால் தேமுதிக, அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது. அதன் பிறகு பல கட்சிகளுடன் கூட்டணி குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தேமுதிக அமமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. டிடிவி தினகரன் கையெழுத்துடன் ஒப்பந்த கடிதத்தை பெற்றுக் தேமுதிக அவைத் தலைவர் டாக்டர் இளங்கோவன். மேலும் அமமுக கூட்டணியில் 60 தொகுதிகள் தேமுதிகவிற்கு ஒதுக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.