Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: அமமுக நிலைமை என்னாச்சு?…. முழு விவரம் இதோ….!!!!

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம் வெளியாகி வருகிறது. இந்நிலையில் டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 19 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. 138 நகராட்சிகளில் 2 நகராட்சி வார்டில் அமமுக வேட்பாளர்கள் வெற்றி அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி நகராட்சி 3-வது வார்டில் அமமுக சார்பாக போட்டியிட்ட கருப்பசாமி வெற்றி பெற்றுள்ளார்.

மேலும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை 4வது வார்டில் அமமுக சார்பில் போட்டியிட்ட விக்னேஸ்வரி வெற்றி பெற்றுள்ளார். தமிழ்நாடு முழுவதும் உள்ள 490 பேரூராட்சிகளில் 11 பேரூராட்சி வார்டு இடங்களை அமமுக கைப்பற்றியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 9 வார்டுகளை கைப்பற்றி அமமுக வென்றுள்ளது. அதில் 8 வது வார்டில் அ.ம.மு.க. தெற்கு மாவட்டச் செயலர் மா. சேகரும், 11 வது வார்டில் இவரது மனைவி திருமங்கை சேகரும் வெற்றி பெற்றுள்ளனர்.

தென்காசி மாவட்டங்களில் 3 பேரூராட்சியிலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் பேரூராட்சியில் 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். இதனையடுத்து மதுரை எழுமலை பேரூராட்சியில் ஒரு வார்டிலும், வேலூர் மாவட்டம் பன்னிகொண்டான் பேரூராட்சியில் ஒரு வார்டு என மொத்தமாக 11 பேரூராட்சியில் அமமுகவினர் வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக எழுமலை பேரூராட்சி 15வது வார்டில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் அமமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். திமுக வேட்பாளரை விட 1 வாக்கு அதிகம் பெற்று அமமுக வேட்பாளர் பக்ருதீன் வெற்றி பெற்றுள்ளார்.

Categories

Tech |