Categories
மாநில செய்திகள்

Breaking: அமித்ஷாவின் தமிழக வருகை ரத்து… திடீர் அறிவிப்பு…!!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சென்னை வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னைக்கு வருகிற 14-ஆம் தேதி துக்லக் பண்டிகையின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க வர இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமன்றி அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பற்றிய ஆலோசனை நடத்தவும் திட்டமிடப்பட்டிருந்தது. மேலும் நடிகர் ரஜினியை நேரில் சந்தித்து அவரின் உடல் நலம் பற்றி விசாரிக்க இருந்ததாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ஜேபி நட்டா சென்னை வருகை தர உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |