மதுரை டூ சென்னை ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் மதுரையில் தரை இறங்கியது. இந்த விமானத்தில் அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, பெரிய கருப்பன் மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் போன்றோர் பயணம் மேற்கொண்டுள்ளனர். அப்போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மதுரையில் தரையிறங்கியது. ஆகவே அமைச்சர்கள் உட்பட 162 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் மீண்டும் மதுரை விமான நிலையத்தில் தரை இறங்கியது குறிப்பிடத்தக்கது.
Categories