Categories
Uncategorized

#BREAKING: அமைச்சர் கடம்பூர் ராஜு விற்கு நிபந்தனையற்ற முன்ஜாமீன்!

தேர்தல் பறக்கும் படை அதிகாரியை மிரட்டிய வழக்கில் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூவிற்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ, கோவில்பட்டி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில் கோவில்பட்டி தொகுதிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி விலக்கு அருகே மார்ச் 12-ல் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த கடம்பூர் ராஜூ வாகனத்தையும் பறக்கும் படையினர் சோதனைஇட   முயற்சித்தனர் ..இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பறக்கும் படை அதிகாரி  மாரிமுத்து என்பவரை  அமைச்சர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.  இதனைத்தொடர்ந்து பறக்கும் படை அதிகாரிகள் காவல் நிலையத்தில்  புகார்  அளித்தனர்.  அதன்படி பறக்கும் படை அதிகாரியை மிரட்டியதாகவும்,  மற்ற அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததற்காகவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு, அவர் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.  அது தொடர்பான வழக்கு இன்று உயர் நீதிமன்ற மதுரை  கிளையில் விசாரணைக்கு வந்தது.  அப்போது  “தேர்தல் நேரம் என்பதால் அமைச்சர் கடம்பூர் ராஜூவிற்கு  நிபந்தனையற்ற முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

 

 

 

 

 

Categories

Tech |