தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகனும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மியாட் மருத்துவமனை சார்பில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனும் ஆரம்பத்தில் அவருக்கு எந்தவிதமான கொரோனா அறிகுறியும் இல்லை என்றும், அவருக்கு சிடி ஸ்கேன் செய்யப்பட்டது. அதில் அவர் உடல்நிலை நார்மலாக இருந்ததாகவும், அவர் தொடர்ச்சியாக கண்காணிப்பில் இருக்கணு என்று சொல்லப்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
மேலும் அமைச்சருக்கு குறைந்த அளவு இருமல் இருந்ததாகவும் இதனால் அவருக்கு மேற்கொண்ட சோதனையில் கொரோனா தொற்று இருப்பதாக மருத்துவமனை செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.அவருக்கு தொடர்ச்சியாக உடல்நலம் சீராக இருப்ப தாகவும் சொல்லப்பட்டுள்ளது. ஏற்கனவே அமைச்சருக்கு கொரோனா தொற்று இருப்பதாக வெளியான செய்திக்கு அமைச்சர் மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.