Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: தமிழக முக்கிய அமைச்சரை காணவில்லை… பெரும் பரபரப்பு…!!!

திருச்சி கிழக்கு தொகுதியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் காணவில்லை என பரபரப்பு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதற்கு மத்தியில் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக அனைத்து கட்சிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறது. அதுமட்டுமன்றி ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் மக்களை கவரும் வகையிலான பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் போட்டியிடும் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மக்களை நேரில் சந்தித்து ஓட்டு சேகரிக்கும் பணியில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் மக்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக எதுவும் செய்யாமல் ஓட்டு கேட்டு வரும் எம்எல்ஏக்களை பொதுமக்கள் கடுமையாக கண்டித்து வருகிறார்கள். அவர்களுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அதன்படி திருச்சியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. 2016 ஆம் ஆண்டு மே முதல் அஇஅதிமுக சுகாதாரத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் காணவில்லை என திருச்சி கிழக்கு தொகுதி முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு கடந்த ஐந்து வருடங்களாக அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |