தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், உள்ளாட்சி அமைப்புகளில் 70%-க்கும் மேலான இடங்களில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. மேலும் 21 மாநகராட்சிகளில் திமுக அனைத்தையும் கைப்பற்றியுள்ளது. தமிழகம் முழுவதும் திமுகவின் இந்த வெற்றியினை அந்த கட்சி தொண்டர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார். மேலும், “9 மாத கால ஆட்சிக்குப் பின் மக்கள் வழங்கிய தீர்ப்பு இது. இந்த வெற்றியை தொண்டர்கள் ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம். நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவோம். மக்கள் தங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை 100% காப்பாற்றுவோம்” என்று தெரிவித்துள்ளார்.