Categories
மாநில செய்திகள்

BREAKING : அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு… “ஜனவரி 1முதல் அகவிலைப்படி உயர்வு”… முதல்வர் ஸ்டாலின் அதிரடி!!

அடுத்த ஆண்டு 2022 ஜனவரி 1-ஆம் தேதி முதல் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் சட்டப்பேரவை நிகழ்வுகளின் போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.. நேற்று கூட சமூகநீதி நாளாக பெரியார் பிறந்த நாள் கொண்டாடப்படும் என அறிவித்தார்.. இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின், அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார்..

அதன்பின் பேசிய முதல்வர் ஸ்டாலின், அகவிலைப்படி உயர்வு அமல்படுத்துவதன் மூலம்  16 லட்சம் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.. அரசு ஊழியர்களின் உற்ற நண்பனாக தமிழ்நாடு அரசு உள்ளது. அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும்.. சத்துணவு ஊழியர்களின் ஓய்வு வயது 58 லிருந்து 60 ஆக உயர்த்தப்படும்.

போராட்ட காலங்களில் ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கைவிடப்படும். அரசு ஊழியர்களின் வேலை நிறுத்த காலம், பணிநீக்க காலம் வேலை நாட்களாக கருதப்படும். வேலை நிறுத்தம் செய்த ஆசிரியர்கள் பணிமாறுதல் பெற்றிருந்தால் மீண்டும் அதே இடத்தில் பணி மாற்றம் செய்யப்படும் என்றார்…

கொரோனா காரணமாக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு 2020 ஏப்ரலில் நிறுத்தப்பட்டது. பட்ஜெட்டில் 2022 ஏப்ரல் மாதத்திலிருந்து அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும் என்று தெரிவித்த நிலையில், ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது..

 

 

Categories

Tech |