Categories
தேசிய செய்திகள்

BREAKING: அரசு சின்னங்கள் இனி…. காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தேசிய மற்றும் மாநில அரசின் சின்னங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மறைந்த முன்னாள் எம் பி அன்பரசு, தேசிய சின்னங்கள் மற்றும் அடையாளங்களை தவறாக பயன்படுத்துவததாகவும் அதைத் தடுப்பதற்கான சட்ட விதிகளை காவல்துறையினர் பின்பற்றுவதில்லை என்று கூறி, உயர்நீதிமன்றத்தில் 2014-ஆம் ஆண்டு ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த சட்ட விதிமீறல்களை கட்டுப்படுத்துவதில் காவல்துறை கவனம் செலுத்தவில்லை என்று தெரிவித்ததுடன், வழக்கில் டிஜிபியை ஒரு அதாவது ஐந்தாவது எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டிருந்தார். மேலும் இந்த விதிகளை முறையாக அமல்படுத்துவதை குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் அல்லது டிஜிபி அலுவலக உயர் அதிகாரிகளும் விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இன்று இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்திய அரசு மற்றும் மாநில அரசின் சின்னங்கள் தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக புகார் அளிப்பவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்று நீதிபதி தெரிவித்தார். மேலும் தற்போது பதவியில் இருக்கக்கூடிய எம்பிக்கள், அமைச்சர்கள் நீதிபதிகள் ஆகியோரது வாகனங்களில் அரசு சின்னங்களை பயன்படுத்தலாம் என்று விதிகள் வகுக்கப்பட்டு வரும் நிலையில், அதை மீறி ஓய்வு பெற்ற பின்னரும் அதை பயன்படுத்துவதாகவும், அரசின் பல்வேறு ஊழியர்களையும் இதை பயன்படுத்துவதாகவும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு அனைவரும் பயன்படுத்தும் போது சாலையில பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்ககூடிய காவலர்கள் அந்த வாகனங்களை எப்படி தடுத்து நிறுத்துவார்கள், எப்படி விசாரிப்பார்கள் என்று காவல்துறைக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் முன்னாள் எம்பிகள், அமைச்சர்கள் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஆகியோர் இந்த தேசிய மற்றும் மாநில சின்னங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு, இதுபோன்ற செயல்பாடுகள் மீது காவல்துறையினர் கூட நடவடிக்கை எடுக்கும் வகையில், விதிமுறைகளை எப்படி அமல்படுத்தலாம் என்று ஆலோசனைகளை வழங்கும் படி தமிழக டிஜிபிக்கும், சென்னை மாநகர காவல் ஆணையருக்கும் உத்தரவிட்ட நீதிபதி எஸ்சுப்பிரமணியன. ம் சுப்பிரமணியன் இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 3-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து தீர்ப்பளித்தார்.

Categories

Tech |