அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் முடியும் என்றால் தாமாகவே முன்வந்து வீட்டிலிருந்து வேலை பார்க்கலாம் என்று சுகாதாரத்துறை கூறியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை செயல்படுத்தி வருகின்றது. முக கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 200 அபராதமும், பொது இடங்களில் எச்சில் துப்புவது களுக்கு 500 ரூபாய் அபராதமும் என்ற கட்டுப்பாட்டை கூட சமீபத்தில் அமல்படுத்தி இருந்தது.
இருப்பினும் அடுத்து வரும் இரண்டு வாரங்கள் மிகவும் முக்கியமானதாகும். இதன் காரணமாக யார்ரெலாம் வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய முடியுமோ அவர்கள் தாமாகவே முன்வந்து “வொர்க் பிரம் ஹோம்” முறையை பின்பற்றலாம். இதற்கு அரசு உத்தரவிடவேண்டும் என்பதை எதிர்பார்க்க வேண்டியதில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த இரண்டு வாரங்களுக்கு மக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியமானது என்றும், கட்டாயம் மக்கள் ஒத்துழைப்பார்கள் என்று அவர் கூறியுள்ளார்.