Categories
மாநில செய்திகள்

BREAKING : அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகளை கண்காணிக்க பறக்கும் படைகளை அமைக்க உத்தரவு – ஐகோர்ட் அதிரடி.!!

பறக்கும் படைகளை அமைக்க தமிழக மருத்துவத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளின் செயல்பாடு, மருத்துவர்கள் வருகையை கண்காணிக்க பறக்கும் படைகள் அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செவிலியர்கள் வருகை, நோயாளிகளுக்கான சிகிச்சையையும் பறக்கும் படைகள் கண்காணிக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் சோதனை நடத்த மண்டல, மாவட்ட அளவில் பறக்கும் படைகளை அமைக்க வேண்டும். பறக்கும் படைகள் முறையாக செயல்படுகிறதா என்பதை மருத்துவத்துறை கண்காணிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் மருந்துகள் காலாவதி தொடர்பான புகாரில் புதிதாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |