Categories
தேசிய செய்திகள்

BREAKING: அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து… 10 பேர் உடல் கருகி பரிதாப பலி..!!

மகாராஷ்டிரா மாநிலம் அகமத்நகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதாவது, ஐசியு பிரிவில் ஏற்பட்ட விபத்தில் நோயாளிகள் உட்பட 10பேர் தீயில் கருகியும், மூச்சுத்திணறி இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 25க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்ததால் பலி எண்ணிக்கை உயரும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |