விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் அந்த மருத்துவமனையில் கட்டில் உடைந்ததில் பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது குழந்தையும், தாயும் கட்டிலில் படுத்திருந்தனர். இந்நிலையில் அவர்களுடன் வந்த 4 பேர் அந்த கட்டிலில் அமர்ந்தால் அது உடைந்தது. இதன் காரணமாக பிறந்த 5 நாட்களே ஆன ஆண் குழந்தையின் தலையில் காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.