அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு – வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்த 3 நாட்களில் வலுவிழக்கும் என தெரிவித்துள்ளது. தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Categories