நாடு முழுவதும் பல்வேறு பொருட்களுக்கு ஐந்து சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்ட நேற்று முதல் அமலுக்கு வந்தது. சில்லறையாக விற்பனை செய்யப்படும் அத்தியாவசிய பொருள்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதன்படி பாக்கெட்டுகளில் அடைக்காமல் விற்கப்படும் அரிசி, மைதா, ரவை, தயிர், லஸ்ஸி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதற்கு எல்லாம் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டதால் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது. இதை எடுத்து மேற்கண்ட பொருட்கள் எல்லாம் ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்படுவதாக புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.