தமிழகத்தில் இன்று வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி மிக நவீன பீரங்கியை நம் நாட்டுக்காக அர்ப்பணித்துள்ளார்.
சென்னையில் மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்கு, புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வந்துள்ளார். சென்னை வந்த அவருக்கு கவர்னர், முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி நேரு விளையாட்டு அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட “அர்ஜுன் மாக் 1 ஏ” என்ற ராணுவ பீரங்கியை நாட்டுக்காக அவர் அர்ப்பணித்தார்.
இந்த பீரங்கி 71 புதிய வசதிகளை கொண்டுள்ளது. பீச் சென்னை ஆவடியில் தயாரிக்கப்பட்ட பீரங்கி ஆகும். இதனையடுத்து எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் உருவ படங்களுக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.