தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழகம் எங்கும் பரவலாக கனமழை பெய்து வருகிறது.. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதீத கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.. தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது..
இந்நிலையில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகும் என்றும், இன்னும் 24 மணி நேரத்தில் தீவிரமடைந்து 11ஆம் தேதி வடதமிழகம் அருகே வரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.