இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்பது அனைவரும் தெரிந்த விஷயமே. ஹெல்மெட் போடுவதால் சாலை விபத்து ஏற்பட்டாலும் தலையில் அடிப்பட்டு உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும். ஆனாலும் ஒரு சிலர் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிச் செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் போது உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே காவல்துறையினர் தங்களால் முடிந்த அளவிற்கு ஹெல்மெட் அணியும்படி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் என இருவருமே கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்கள். ஹெல்மெட் சரியான முறையில் லாக் செய்திருக்க வேண்டும் .அத்துடன் ஐஎஸ்ஐ முத்திரை இருக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் காவல்துறை ,அரசு ஊழியர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.