நாடு முழுவதும் ரயில் சேவை அட்டவணைப்படி இயக்கப்படும் ரயில்கள் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் அட்டவணைப்படி இயக்கப்படும் ரயில்கள் ஆகஸ்ட் 12ம் தேதி வரை ரத்து செய்யப்படுகின்றது என ரயில்வே அறிவித்துள்ளது. எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில், புறநகர் ரயில் சேவை ஆகஸ்ட் 12ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய நகரங்களின் இயக்கப்படும் மின்சார ரயில் சேவையும் ரத்து என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஜூலை 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை முன்பதிவு செய்ய அனைத்து டிக்கெட்டுகளும் ரத்து. மெட்ரோ ரயில் சேவை இப்போதைக்கு தொடங்க அனுமதி இல்லை எனவும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கானசிறப்பு விரைவு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.