செங்கல்பட்டு மாவட்டம் சிட்லபாக்கம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சட்டவிரோத கட்டிடங்களை இடிக்கவும் அரசுக்கு உத்தரவிட கோரி வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்நிலையில் கல்வியாண்டு முடிந்ததும் பள்ளியை வேறு கட்டிடத்துக்கு மாற்றிவிட்டு, ஆக்கிரமிப்பு கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
முன்பாக பள்ளியை வேறு இடத்திற்கு மாற்றி கட்டிடத்தை அகற்ற கல்வியாண்டு வரை அவகாசம் வேண்டும் என அரசு கோரிக்கை விடுத்தது. சிட்லபாக்கம் ஏரியில் பள்ளிக்கட்டிடத்தை தவிர பிற ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு விட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.