TNPSC முறைகேட்டை போல ஆசிரியர் தகுதி தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாளில் குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் , இரண்டாம் தாளில் அதிக மதிப்பெண் பெற்றதாக புகார் எழுந்தநிலையில் உரிய ஆவணங்களுடன் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் பதில் கூறியிருக்கிறது.
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் செட் முதல் தாள் , செட் 2ஆம் தாள் என்று 2013 , 14 , 15 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்வில் முறைகேடு நடந்துள்ளது என்று சொல்லப்படுகின்றது.அதில் 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் குறிப்பாக கொங்கு மண்டலத்தில் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் , ஒவ்வொரு மாவட்டங்களில் சராசரியாக 20 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் சேலம் மையத்தில் 200க்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதே போல திண்டுகளிலும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால் அங்கே முறைகேடு நடந்துள்ளது என்று கூறி தகுதி தேர்வு எழுதியவர் சங்கம் ஆவணங்களை வெளியிட்டு வந்த நிலையில் , முறையான ஆவணத்தோடு ஆசிரியர் தேர்வாணையத்தை அணுகினால் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கப்பட்டு டிஎன்பிஎஸ்சி யில் நடப்பது போன்ற விசாரணை மேற்கொள்ளப்படுமென்று ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் அளித்திருக்கிறது.