Categories
தேசிய செய்திகள்

BREAKING: ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு… முக்கிய அறிவிப்பு…!!!

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் முக்கிய தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், சில முக்கியமான அரசு தேர்வுகள் மட்டும் நடத்தப்பட்டன.

இந்நிலையில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. கடந்த ஜனவரி 31ஆம் தேதி நடந்த மத்திய தகுதி தேர்வு முடிவுகள் http://ctet.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முதல் பாடப் பிரிவில் 12,47,217 பேர் தேர்வு எழுதிய நிலையில், 4,14,708 பேரும், இரண்டாவது பாடப் பிரிவில் 11,04,454 பேர் தேர்வு எழுதிய நிலையில், 2,39,501 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |