தமிழகத்தில் பெரும்பாலும் கிராமப்புறங்களில் கோவில் திருவிழாக்கள் மற்றும் மற்ற விழாக்களின் போது ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் மற்றும் பாட்டுக் கச்சேரி, கும்பம், கரகாட்டம் போன்ற பாரம்பரிய கலைகளை நடத்துவது வழக்கம். இந்த நிகழ்ச்சிகள் ஆனது இரவு தொடங்கி விடியற்காலை வரை நடப்பது வழக்கம். இந்த ஆடல் பாடல் நிகழ்ச்சியினை வெளியூர்களில் இருந்தும் வந்து பார்ப்பார்கள்.
இந்நிலையில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் இரவு 8-11 மணிக்குள் முடித்து கொள்ள வேண்டும் என்றும் அதில் ஆபாசமான வார்த்தைகளும் நடனங்களும் இருக்கக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.