Categories
தேசிய செய்திகள்

ஐகோர்ட் தீர்ப்பு ரத்து….. ஆடைக்கு மேல் தொட்டு பாலியல்….. “போக்சோ பொருந்தும்”… சுப்ரீம் கோர்ட் அதிரடி..!!

ஆடைக்கு மேல் தொட்டு பாலியல் தொல்லை தந்தால் போக்சோ சட்டம் பொருந்தாது என்ற மும்பை உயர்நீதிமன்ற கிளையின் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் 12 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் ஆடைக்கு மேலே சீண்டி பாலியல் தொல்லை தந்துள்ளார்.. இந்த வழக்கில் மும்பை உயர்நீதிமன்ற கிளை நீதிமன்ற நீதிபதி  புஷ்பா கனேடிவாலா, ஆடை அணிந்திருக்கும் போது பெண்களின் மார்பகங்களை தொட்டாலோ, தடவினாலோ அது பாலியல் வன்முறை ஆகாது. ஆடைக்கு மேல் தொட்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிய கூடாது எனக்கூறி குற்றவாளிக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 3 ஆண்டு சிறை ஓராண்டாக குறைக்கப்பட்டு, 500 ரூபாய் அபராதம் விதித்தார்..

இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சர்ச்சை தீர்ப்புக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து தேசிய மகளிர் ஆணையம், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது..

இந்த நிலையில் அந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி எஸ்.ஏ பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ் போபண்ணா, வி.ராம சுப்பிரமணியன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது அந்த தீர்ப்பு ரத்து செய்யப்படுவதாக உச்சநீதிமன்றம் அதிரடியாக கூறியுள்ளது. அதாவது, தொடுதல் என்ற சொல் பாலியல் தொடர்பை குறிக்கும், அது ஆடைக்கு மேல் இருந்தாலும் பாலியல் சீண்டல்தான், போக்சோ சட்டத்துக்குள்தான் வரும்.. எனவே ஆடைக்கு மேல் தொட்டு பாலியல் தொல்லை தந்தால் போக்சோ சட்டம் பொருந்தாது என்ற மும்பை உயர்நீதிமன்ற கிளையின் தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்..

Categories

Tech |