ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அதில், தங்கள் மருத்துவர்களை விசாரிக்க, 21 மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைக்க உத்தரவிடவும், அதுவரை ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்க தடை விதிக்கவும் கோரியிருந்தது. அப்பல்லோ மருத்துவமனை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் விசாரணை ஆணையத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டதால் விசாரணை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு எங்களின் முழு ஒத்துழைப்பு தொடரும். ஆணையத்தில் இதுவரை அப்பல்லோ மருத்துவர்கள் 56 பேர், 22 துணை மருத்துவர்கள் ஆஜராகி உள்ளனர். ஜெயலலிதா தொடர்பான 6000 பக்க மருத்துவ அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அப்போலோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.