தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் செல்ல உள்ள நிலையில் ஆதரவாளர்களுடன் இன்று மாலை ஓபிஎஸ் ஆலோசனை நடத்துகிறார்.
அதிமுகவுக்குள் ஒற்றை தலைமை பிரச்சனை பூதாகரமாக வெடித்ததை அடுத்து, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இரண்டு அணிகளாக பிரிந்தனர். கடந்த 2 மாதங்களாக இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பி வருகிறது. பெரும்பான்மையாக இபிஎஸ் மாவட்ட செயலாளர்களின் ஆதரவுடன் இருந்ததால் ஓபிஎஸ் ஆல் எதுவுமே செய்ய முடியவில்லை.. இதற்கிடையே இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்..
இருப்பினும் தொண்டர்கள் என்னிடம் இருக்கிறார்கள், அதிமுக தன்னுடையது தான் என்று கூறி வருகிறார் ஓபிஎஸ். இந்த நிலையில் ஓபிஎஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, குணமடைந்து தேனியில் உள்ள தனது வீட்டில் ஓய்வில் இருந்தார். இந்நிலையில் சென்னையில் உள்ள ஓட்டலில் இன்று மாலை 5 மணிக்கு சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்ட ஆதரவாளருடன் ஆலோசிக்கிறார் ஓபிஎஸ்.. இதில் கட்சி நிர்வாகிகள் நியமனம், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் உள்ளிட்டவர்களை பற்றி ஆலோசிப்பார் என தெரிகிறது.
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வரும் நிலையில், ஓபிஎஸ் என்று ஆலோசனை நடத்துவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.