Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking: ஆதரவாளர்களுடன் ஈ.பி.எஸ் ஆலோசனை…!!

அதிமுக பொதுக்குழு செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடியின் இல்லத்திற்கு   முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வளர்மதி, பெஞ்சமின், ஆகியோரோடு எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருகிறார். அதிமுகவில் இருந்த இரட்டை தலைமையை நீக்கிவிட்டு ஒற்றை தலைமையை ஏற்படுத்த ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி தரப்பு பொதுக்குழு கூட்டம் நடத்தியது.

அந்த கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஜூலை 11ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் இபிஎஸ் தரப்பு நடத்திய பொதுக்குழு கூட்டமும், இடைக்கால பொதுச் செயலாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதும் செல்லாது என்று தற்போது சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது. இது குறித்து இபிஎஸ் தனது ஆதரவுகளோடு ஆலோசனை நடத்தி வருகிறார்.

Categories

Tech |