Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: ஆந்திராவில் நுழைந்த ஒமைக்ரான்…. ஒருவருக்கு பாதிப்பு உறுதி…!!!!

தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கடந்த 2ஆம் தேதி ஒமைக்ரான்  நுழைந்தது. இதனையடுத்து நாடு முழுவதும் ஆக மொத்தம் 33 பேர் இந்த வைரசுக்கு பாதிப்புக்கு ஆளாகி இருந்தனர்.

இந்த நிலையில் ஆந்திராவில் முதல்முறையாக ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு அமைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து மும்பை வழியாக விசாகபட்டினம் வந்த 34 வயது நபர் ஒருவருக்கு  பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக இந்தியாவில் இதுவரை ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

Categories

Tech |