Categories
மாநில செய்திகள்

#BREAKING : ஆன்லைன் ரம்மி தடை சட்டம் – ஆளுநருக்கு தமிழக அரசு விளக்கம்..!!

தமிழக சட்டப்பேரவையில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி ஆன்லைன் ரம்மி தடை மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர்.என் ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சட்ட மசோதாவின் காலம் வரும் 27ஆம் தேதி முடிவடையும் நிலையில், தமிழக அரசிடம் இது குறித்து விளக்கம் கேட்டிருந்தார் ஆளுநர் ரவி. இந்நிலையில் தற்போது தமிழக அரசு ஆளுநர் கேட்ட விளக்கத்திற்கு கடிதம் மூலமாக பதில் அளித்துள்ளது. மசோதாவில் கூறப்பட்டுள்ள தண்டனை விதிப்பது தொடர்பான அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளதா என ஆளுநர் கேள்வி எழுப்பினார். ஆளுநர் ரவியின் கேள்விகளுக்கு சட்டத்துறை மூலமாக உரிய விளக்கத்தை அனுப்பி வைத்துள்ளது தமிழக அரசு.

Categories

Tech |