சென்னை பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகாரை அடுத்து மற்ற பள்ளி ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்களும் அடுத்தடுத்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனால் ஆன்லைன் வகுப்பில் படிக்கும் மாணவிகளின் பெற்றோர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில் ஆன்லைன் வகுப்பு தொடர்பான புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மாணவ மாணவிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் விசாரித்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாணவ மாணவிகள் புகார் தெரிவிக்க ஹெல்ப் லைன் உருவாக்க வேண்டும் என்றும், ஆன்லைன் வகுப்புகளில் முறையற்ற வகையில் நடந்து கொள்வோர் மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளார்.