உலகம் முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான நாடுகளில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. அதனால் மக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் புதிய உருமாறிய ஆபத்தான கொரோனா வைரஸ்கள் தோன்றி உலகம் முழுவதும் பரவுவதற்கான வலுவான வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் அவசர குழு தெரிவித்துள்ளது. அவற்றைக் கட்டுப்படுத்துவது மிகவும் சவாலான காரியமாக இருக்கும். பெருந்தொற்றின் குணத்தை தவறாக கணித்து அது முடிவுக்கு வருவதாக நினைக்கிறோம். ஆனால் அது தற்போது முடிவதற்கான சாத்தியமில்லை என்று குறிப்பிட்டுள்ளது. இது உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.