காபூல் விமான நிலையம் மூடப்பட்டதால் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. நேற்று 129 பேர் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்ட நிலையில், இன்று மேலும் ஒரு விமானம் 12.30க்கு காபூலுக்கு செல்ல இருந்தது. தற்போது அந்த விமான நிலையம் மூடப்பட்டதால் இந்தியர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
காபூல் விமான நிலையத்தில் தற்போது விமானங்கள் தரை இறங்குவதற்கான வாய்ப்பு கள் முற்றிலுமாக இல்லை என்பதுதான் அங்கிருந்து வரக்கூடிய தகவலாக இருக்கிறது. ஏனென்றால் மக்கள் கூட்டம் ஆயிரக்கணக்கில்…. லட்சக்கணக்கில் விமான நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்.
எனவே அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டு இருக்கக்கூடிய படைகள் ஆகட்டும், அமெரிக்கப் படைகள் ஆகட்டும் துப்பாக்கிச் சூடு நடத்தி கூட்டத்தை கலைக்க கூடிய விஷயங்களை அவர்கள் செய்து வருகின்றார்கள். அதே நேரத்தில் தாலிபான்களும் பொதுமக்களை அந்த விமான நிலையத்திற்கு செல்ல கூடியவர்களை தாக்கக் கூடிய சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. இதனால் காபூல் விமான நிலையத்தில் விமானங்களை பத்திரமாக தரை இறங்குவது என்பது இயலாத விஷயமாக மாறிவிட்டது. இதனால் இந்தியர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.