தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக் கடலில் தெற்கு ஆந்திரா – வட தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டத்தில் கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக இன்று ஒருநாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Categories