அதிமுகவைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்ந்து கொண்டிருக்கின்றது. இன்று நடைபெறக் கூடிய கூட்டம் என்பது தலைமை செயலாளராக இருக்க கூடிய எடப்பாடி பழனிச்சாமி அழைப்பின் பெயரில் நடைபெறுகின்றது. இந்நிலையில் அவருடைய அழைப்பின் பேரில் தலைமைகழக நிர்வாகிகள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அது மட்டுமல்லாமல் ஓபிஎஸ் தரப்பிலிருந்து நேற்று இரவு ஒரு அறிக்கை வெளியானது. இந்த கூட்டத்திற்கு நான் அழைப்பு விடுக்கவில்லை. ஒருவேளை இந்த கூட்டத்தில் எடுக்கக்கூடிய முடிவுகள் என்னை எந்த இடத்திலும் கட்டுப்படுத்தாது என்ற ஓபிஎஸ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த கூட்டத்தில் மிக முக்கியமான ஒரு முடிவெடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் இருந்தாலும், பொருளாளர் பதவியும் அவரிடம்தான் இருக்கின்றது. பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்று ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடிக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் ஒரு முடிவு எடுக்கப்படலாம் என்று ஒரு தகவல் இருக்கிறது. என்ன முடிவானாலும் இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கப்படலாம்.