தமிழகத்தில் அதிமுக விவகாரம் கட்சியையே இரண்டாக்கி விட்டது. கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்து முடிந்த அதிமுக பொதுமக்களும் மற்றும் செயற்குழு கூட்டம் கலவரத்தில் முடிந்த நிலையில் வருகின்ற ஜூலை 11 ஆர் தேதி மீண்டும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓபிஎஸ் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ள நிலையில் தற்போது ஈபிஎஸ் சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில், ஓபிஎஸ் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றை தலைமையை கோரி இருப்பதாகவும், கடிதத்தில் கையெழுத்திட்டு தன்னிடம் அளித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணைப்பாளர் தேர்தலை திமுக பொதுக் குழு அங்கீகரிக்க வில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மீண்டும் ஒரு புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.