Categories
அரசியல் சற்றுமுன்

BREAKING: இது விவசாயிகளின் மாபெரும் வெற்றி…. சீமான் கருத்து…!!!

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டில்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் 1 வருடத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பிரதமர் மோடி அவர்கள் இந்த 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமல்லாமல், நடிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அந்தவகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்ற மத்திய அரசின் அறிவிப்பு விவசாயிகள் ஒப்பற்ற ஈகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |