Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING : இந்தியன் -2 படப்பிடிப்பு விபத்து – ”நிவாரணமாக ரூ 1 கோடி” கமல் அறிவிப்பு …!!

லைக்கா புரொடக்‌ஷன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகிவரும் ‘இந்தியன் 2’ படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார். இப்படத்தில் கமல் ஹாசன், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, யோகிபாபு உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர். ‘இந்தியன் 2’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  அதை தொடர்ந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், மத்தியப் பிரதேசம் மாநிலம் போபால் ஆகிய இடங்களில் நடைபெற்றது. இதன் பின்னர் குவாலியர் நகரில் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.  அதை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர் நகரில் ஷுட்டிங் நடைபெற்றது.

இந்தநிலையில் தற்போது சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள இ.வி.பி படப்பிடிப்பு தளத்தில் ‘இந்தியன் 2’ படத்திற்கு செட் அமைக்கும் பணி நடைபெற்ற போது கிரேன் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சண்டை கலைஞர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன் , இந்தியன் 2 படப்பிடிப்பு ஏற்பட்ட விபத்து என் குடும்பத்தில் நிகழ்ந்ததாக கருதுகிறேன்.உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ஒரு கோடி வழங்குகின்றேன். இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரமிது.  100 கோடி , 200 கோடி என மார்தட்டிக்கொள்ளும் நாம் கடைநிலை ஊழியனுக்கு பாதுகாப்பு தர முடியவில்லை என்று கமல் வேதனை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |