சீனாவில் அதிவேக கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணமாக கருதப்படும் BF.7 ஒமிக்ரான் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவில் புதியவகை கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க நிலையில், இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. மக்கள் கூடும் இடங்களில் முக கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப் படுத்தியுள்ளது மத்திய அரசு. அனைத்து மாநிலங்களிலும் கொரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார்.
இந்நிலையில் சீனாவை அச்சுறுத்தி வருகின்ற உருமாறிய கொரோனா வகையான BF. 7 பாதிப்பு இந்தியாவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. குஜராத்தில் 2 பேரும், ஒடிசாவில் ஒருவரும் உருமாறிய BF.7 ஒமிக்ரான் திரிபால் பாதிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் உருமாறிய ஒமிக்ரான் வகை கொரோனா கட்டுக் கடங்காமல் பரவி வருகிறது.
தொற்றால் பாதிக்கப்பட்ட நபருக்கு விரைவாக காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகளை உண்டாக்கும் தன்மை உடையது. ஒமிக்ரான் திரிபு குறித்தும், அதன் தன்மைகள் குறித்தும் கூடுதல் ஆய்வுகள் தற்போது நடத்தப்பட்டு வருகின்றன.